Feb 1, 2011

ரசிகர் தயாரிக்கும் திரைப்படம்; வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் !!


தொழிலாளி, முதலாளி, டாக்டர், என்ஜினீயர், என ரஜினி ரசிகர்களுக்குள் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ஆனால் ராமநாதபுர மாவாட்ட ரஜினி மன்றத்தின் மாவட்ட செயலாளர் திரு.பால நமச்சிவாயம் எடுத்திருக்கும் அவதாரம் என்ன தெரியுமா? சினிமா தயாரிப்பாளர். 

IMG 4880 640x438  ரசிகர் தயாரிக்கும் திரைப்படம்; வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

முற்றிலும் புதியவர்களை வைத்து, இவர் எடுக்கும் படத்திற்கு மதுரை வட்டார மொழியில் மிகவும் பாப்புலரான ‘பயபுள்ள’ என்ற வார்த்தையை டைட்டிலாக வைத்திருக்கிறார் பால நமச்சி. தான் படம் தயாரிக்கும் விஷயத்தை சமீபத்தில் சூப்பர் ஸ்டாரிடம் கூறி அவரது ஆசியை பெற்று வந்திருக்கிறார். முற்றிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று தெரிந்துகொண்ட சூப்பர் ஸ்டார், இவருக்கு வாழ்த்து கடிதமும் தந்திருக்கிறார்.

IMG 5332 640x428  ரசிகர் தயாரிக்கும் திரைப்படம்; வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

இந்த விஷயம் நமக்கு தெரியவந்தது, மிகவும் சுவாரஸ்யமான சம்பவமாகும். நமக்கு இது குறித்து முதலில் எதுவும் தெரியாது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வடபழனி சிக்னல் அருகே, காவல் நிலையம் எதிரில் “தினசரி உதிப்பது சூரியன்; திரையுலகை ஜெயிப்பது எந்திரன்” என்ற வாசகத்துடன் இந்த பேனரை முதன் முதலில் பார்த்தேன். பரவாயில்லேப்பா… அவங்க பட பேனர்லே கூட யாரோ நம்மளை வாழ்த்தி வெச்சிருக்காங்க என்று நினைத்துகொண்டேன். தயாரிப்பாளர் பெயரை பார்த்தபோது, எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே என்று நினைத்துக்கொண்டேன்.
அடுத்த சில வாரங்களில் தலைவரின்  பேடுடன்  அதே படத்தின் வேறு புதிய பேனரை பார்க்க நேர்ந்தது. அதன் பிறகு தீவிரமாக விசாரித்தபோது தான் புரிந்தது, தயாரிப்பாளர் வேறு யாருமல்ல. நமது ராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் திரு.பால நமச்சியாவம் என்று. இது தொடர்பாக நமக்கு தகவல் அளித்து தொடர்பு ஏற்படுத்தி தந்தவர், நம் தள வாசகர் நாகை மாவட்ட (தெற்கு) தலைவர் திரு.நாகூர் பாரி அவர்கள். அவருக்கு நம் நன்றி.
இதுகுறித்து திரு.பால நமச்சி நம்மிடம் கூறுகையில், “நான் நேசிக்கும் நம் தலைவர் கையில் வாழ்த்து கடிதம் பெற்றது, எனக்கு மிகப் பெரிய பாக்கியம். இந்த கடிதம் என் கைக்கு வந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவரது பரம ரசிகனான நான் ஒரு படத்தை தயாரிக்கும் அளவிற்கு வந்தது அவரால் தான்.” என்றார்.
இந்த படத்தின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா? முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்கள் பணியாற்றும் படம் இது. கதாநாயகன் முதல் கதாநாயகி வரை, டைரக்டர் முதல் ஒளிப்பதிவாளர் வரை அனைவரும் ரஜினி ரசிகர்கள்.
“இது முழுக்க முழுக்க சாத்தியமானது நான் வணங்கும் சித்தர்களின் அருளால் தான்.” என்று கூறும் நமச்சி பதினெண் சித்தர்களின் பரம பக்தர். சித்தர்களுக்கு உருவம் கொடுக்கும் ஒரு உன்னத முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். ஒரு புனிதமான பணியில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டு வருவதால், அசைவ உணவு வகைகளை கடந்த சில ஆண்டுகளாக அறவே இவர் தொடுவதில்லை.

Payapulla J 640x494  ரசிகர் தயாரிக்கும் திரைப்படம்; வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

அவரது முயற்சி வெற்றியடைய நமது தளம் சார்பாக வாழ்த்துக்களை கூறி, அதே போல “பயபுள்ள” படமும் “மைனா” போல ஒரு மைல் கல் படமாக அமைய இறைவனை வேண்டிக்கொள்வதாக கூறினோம்.

Namachi with thalaivarJ 640x266  ரசிகர் தயாரிக்கும் திரைப்படம்; வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

இந்த பதிவுடன், பேனர் புகைப்படங்களையும், தலைவர் அளித்த கடிதத்தையும், நமச்சி தலைவருடன் பல்வேறு சமயங்களில் எடுத்த புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்.


நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

Jan 29, 2011

ராணா


சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட அறிவுப்பு அதிகாரப்பூர்வமாகவே வந்து விட்டது. நேற்றைய கோடம்பாக்கத்தின் பரபரப்பு ரஜினி நடிக்கும் ராணா படத்தை பற்றிதான். முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தில் கைகோர்க்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் மற்றொரு செய்தி, இந்த ராணா, அனிமேஷன் படம் அல்ல… 100 சதவீத பொழுதுபோக்குகள் நிறைந்த பக்கா ரஜினி படம்!இந்த படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். பலவருடங்களுக்கு முன்பாக வந்த மூன்று முகம் படத்தில் ரஜினி மூன்று வேடத்தில் நடித்தார். அதில் ரஜினியின் “அலெக்ஸ் பாண்டியன்” கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளியாகிறது. ரத்னவேல் ஒளிப்பதிவை கவனிக்கஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு ஆன்டனிகலை இயக்கத்தை ராஜீவன் என முன்னணி கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். மாசி 7 ஆம் திகதி ரஹ்மான் Composing ஆரம்பிப்பதாக கூறி உள்ளார்.

ரஜினிக்கு இதில் இரண்டு ஜோடிகள். தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடிப்பார்கள் என பேச்சு அடிபடுகிறது. 
 
தீபிகா படுகோனே இதுபற்றி கூறும்போது, 
 
ரஜினியுடன் நடிக்க என்னை அணுகினர். அவருக்கு ஜோடியாவது பெருமையான விஷயம். கால்ஷீட் பிரச்சினை இருக்கிறது என்றார். ரஜினியுடன் நடிக்க இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு வாய்ப்பு அமையாது என்று கருதுகிறார். வேறு படங்களுக்கு கொடுத்த தேதிகளை `ராணா` படத்துக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளார்."நடித்தால் இனி ரஜினியுடன் தான், வேறு தமிழ் ஹீரோக்களுக்கு இப்போதைக்கு கால்ஷீட் தரும் ஐடியா இல்லை" என ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்தவர் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து ஈராஸ் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், “இந்திய சினிமாவின் நிகரில்லாத சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முற்றிலும் வித்தியாசமானமுழு நீள ரஜினி படமாக ராணா உருவாகிறது. இந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்…”, என்றார்.

ராணாவின் தொழில்நுட்பப் பணிகளை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஐக்யூப் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் கவனிக்கின்றனர். இந்த நிறுவனம் ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்காக எம்மி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது, 2012 இன் முதற்பகுதியில் ராணா திரைக்கு வரும் என எதிர்பக்க படிக்கிறது.

எப்படியோ, தலைவர் தனது அடுத்த படத்தை உடனே துவக்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சிங்கம் கலந்துக்குதுன்னு தெரிஞ்சப்பறம் நொண்டிக்குதிரைகள் ரேஸ் லிருந்து ஒதுங்க வேண்டியதுதான் ....


நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

Jan 25, 2011

காவலனும் வாசகர் கமென்ட்சும்

இன்னும் ஒரு சுட்ட பதிவு, எவ்வித மாற்றமும் இன்றி இணைத்து உள்ளேன், சுடப்பட்ட இடம் முடிவில்...


ஒரு படத்தை ஓட்டுறதுக்கு என்ன பாடு எல்லாம் படுறாங்க... நண்பர் ஒருவர்  facebook ல அனுப்பிச்ச படம். விஜய் படம் னா... மக்கள் எவ்வளவு குஷியா கமெண்ட் குடுத்திருக்கிறாங்க பாருங்க...   காமெடிக்கு மட்டும் தாங்க...
பாவம் படத்தை ரிலீசே பண்ண விடாம பாடா படுத்திட்டாங்க..  ஒரு படம் எடுத்து , அதை சக்சஸ் பண்ணிக் காட்டுறது அவ்வளவு சாதாரணம் இல்லை... 
மத்தபடி படம் பாக்கிறதுக்கு கொஞ்சம் பரவா இல்லைன்னு கேள்வி.... இருந்தாலும் இதுக்கு முந்தின படங்களின் வரலாறு பார்க்கிறப்போ ( வரலாறு முக்கியம் அமைச்சரே.!) இந்த படத்தை பார்க்கிற தைரியம் இன்னும் வரலை... 

Prasanna Rajan ‎:    'சுறா'வுக்கு இலவச காட்சி போட்டாய்ங்க, 'காவலனு'க்கு செல்ஃபோன், அடுத்து 'வேலாயதத்துக்கு' ஒரொரு ஷோவுக்கும் ரெண்டு கிராம் தங்கம் கொடுத்தாத் தான் படமே ஓடும் போல இருக்கு...

Syedali Syed :
விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்“ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணிàர். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போàங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு..., இப்ப யாராவது வெளியே போகணும்à இத்தனை ரூபாய் கொடுக்கணும்னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.
இப்படி ஒரு ஜோக் (சில நேரங்களில் எதார்த்தம் கூட சிரிப்பை வரவழைக்கும்) நேற்று எனக்கு வந்தது. அதை அப்படியே தமிழில் கொடுத்துள்ளேன்...

Sathiyanarayanan சத்யன்  :    காவலன் படத்துக்கு திருட்டி விசிடி யாருமே போடலயாம்! (தியேட்டருக்கும் போகல... அது வேற விசயம்) திருட்டு விசிடிய நிறுத்துறதுக்கு எவ்வளவோ முயற்சி பண்ணியும் கேக்காத ஆசாமிங்க... விஜய் படம் ரிலீசானதும் டக்குன்னு நிப்பாட்டிட்டாங்களாம்.


Syedali Syed  : டிக்கெட் வசூல் 30 ரூபாய்; பரிசு ஆயிரம் ரூபாய்
நெசமாத்தான் சொல்றாங்களா...?

Karthikeyan Subramaniyan   : ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

Pratap Kumar  : பலதடவை பார்ததவங்களுக்கு கம்ப்யுட்டர் பரிசாம்ல....
பலததடவை பார்த்து கம்ப்யுட்டரை வாங்கறதுக்கு முதல்ல உயிரோட இருக்கனுமே....

Tamil Nilavan  : விஜய் கிரியேட்டிவ்வான படங்களில் நடிக்கல.. ஆனால் அவரை வைச்சு எத்தனை வகையான கிரியேட்டிவ் ஜோக் வருது பாருங்க !

Pratap Kumar  : நம்ம மக்கள் அப்படியாவது சந்தோஷமா இருந்தா சரிதான்....இதுக்காகவே விஜயை பாராட்டுவோம்...:)))

Nandha அண்டல்மகன்  :  பாவம்யா மனுசன்...எப்படி இருந்தாஆளு இப்படி பண்றீங்களே???

Jagadeeswaran நடராஜன்  :  அனேகமா அடுத்த பரிசு டி.வி.டியில் படம் பார்க்கறவங்களுக்காக இருக்கும்.

விஜய் இப்படி காமெடி பீஸ் ஆயிட்டீங்களே!,,,

Karthikeyan சுப்பிரமணியன்   :  ஸ்கூல் டெஸ்டில பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்டில பிட் அடிக்க முடியுமா?

Kiran Gosu  : பல முறை பார்த்தால் கம்ப்யூட்டர் வழங்கப்படும் - இதைப் பார்க்கும் போது `கப்பல்ல வேலை` தான் நினைவுக்கு வருது.

Lovedale Madyy  : படத்த பாத்துட்டு எல்லாரும் தற்க்கொல பன்னிக்குவாங்கங்கிர நம்பிக்கையோட போஸ்டர் அடுச்சிருக்கானுங்க பயபுள்ளைக........

Fernando பெர்ன்ன்டோ   : காவலனா வந்த விஜய்க்கு வேலாயுதத்தை கையில தூக்கி குடுதிட்டங்க எல்லோருக்கும் கண்ல குத்த போறாரு     


NOTE - சுட்ட இடம்


நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

அதிகமான ஆண்கள் புகைப்பிடிப்பது எதனால் ??


இவை அனைத்தும் கற்பனையே ...... 

இது தான் நான். ரொம்ப நல்லவன். படிப்பும் புத்தகமமும் ஆக இருந்தேன்.

"நாங்க எல்லாம் Village விஞ்ஞானி பாஸ்" 


ஆன, அவளை முதல் முதலாக பார்த்த அந்த நாள் எண்ட படிப்பு போச்சு பாட்டு வந்திச்சு. என்ன பாட்டு தெரியுமா ???


"உன்னை பார்த்த firstடு secondல என்ன காணோம்,தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்....பார்த்த firstடு secondலயிருந்தே காணோம்,தேடி பார்க்குறேன் கண்டபடி நானும்..."


என்னை கண்டு பிடிக்க அவள் எனக்கு வேணும் எண்டு நன்றாக தெரியுச்சு கொண்டேன். அவளை அடைய எத்தினையோ பொய் சொன்னேன்...

"பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகி அடி..."


பல பொய் சொன்ன நான், கடைசி வரைக்கும் உன்னோட இருப்பேன் என்று சத்தியம் கூட செய்தேன்.

"தாலியே தேவை இல்லை நீ தான் என் பொண்டாடி ...."


நான் செய்த சத்தியத்துக்கு கூட அவள் மடங்க வில்லையே எண்டு FEEL ஆகினேன். அப்ப  என் நண்பன் சொன்னான் அவளுக்கு Feb14th  அன்று ஒரு Gift  குடு மச்சி என்றான். சரி அவன் சொல்லுறான் என்று நானும் ஒரு Gift ஐ குடுத்தேன். 

"நண்பேண்டா...." 


அவள் அந்த Gift ஐ மட்டும் இல்லை என் LOVE ஐ கூட ACCEPT பண்ணிடால், அந்த செகண்ட் ல நான் கீழ Photo ல  இருக்கிறது போல Shock ஆகிடேன்.

"சத்தியமா அவள் என்ன காதலிச்சால் ஆனால் ஒத்துக்க மாட்டால் டா...."


அப்புறம், என்ன அவள் ஓட Night Night ஆக Phone ல ஒரே லவ்சு தான், அப்போது கூடினது எங்கட லவ் மட்டும் இல்லை, என் Phone Bill உம் தான். அப்புறம் அடுத்த நாள் காலை College ல போய் தூங்கினது தான் மிச்சம். 


காதலி கை கூடினா அவள்ட கை யா பிடிச்சு Road ல நடக்குறது சகயம், அப்போது நம்ம பசங்க கீழ Photo ல இருக்கிறது போல ஒரு லுக் விடுவாங்களே, பாக்கவே பாவமா இருக்கும் 


அவங்க லுக்கு நான் ஒரு Reply  லுக் குடுப்பேன் பாருங்க, அத வாழ்க்கையில மறக்கவே முடியாது 


அப்பிடியே கொஞ்ச நாள் நம்ம காதல் போய் கொண்டு இருக்கேக, ஒரு நாள் அவள் எண்ட ரெண்டு காதிலையும் பூ வைச்சுட்டு போய் விட்டாள்


"அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே..."


அப்ப செத்து போயிடலாமா என்று தோன்றும், எங்க போறது யாரு இனி பாக்கிறது எண்று ஒண்ணுமே புரியல 


அப்போது தான் எனக்கு துணை ஆனது சிகிரெட் அவளை மறக்க ...."நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்...நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்..."


இப்ப புரியுதா அதிகமான ஆண்கள் புகைப்பிடிப்பது எதனால் என்று .....

நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

Jan 21, 2011

சிறுத்தை என் பார்வையில்.....

ரவிதேஜா, அனுஷ்கா, நடித்த தெலுங்கில் வெளி வந்த விக்ரமார்குடு படத்தின் தமிழ் ரீமேக்தான் சிறுத்தை. அண்ணன் சூர்யா இன் சிங்கத்துக்கு பின்னர் வந்த வழக்கமான மசாலா படம் தான் இந்த சிறுத்தை.  சூர்யாவுக்கு வீட்டிலேயே ஒரு எதிரி(சினிமாவில்) உருவாகி விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. 

இனி கதைக்கு வருவோம், ஆந்திராவில் உள்ள கிராமம் ஒன்றை ஒரு ரவுடிக் குடும்பம் கொடுமைப்படுத்தி கொண்டிருக்கிறது. எங்களை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்குகிறார்கள். உயர்த்திய மீசையையோடு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை அடக்கி மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார். ஆனால் வில்லனுடைய தாக்குதலில் படுகாயம் அடைகிறார் டிஎஸ்பி கார்த்திக்...கார்த்திக் இறந்து விட்டதாக நினைத்து கொண்டு வில்லன் கும்பல் சென்று விட..அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வருகிறார்கள்..... 


இன்னொரு கார்த்திக்(ராஜா)  திருடன். அவரும் சந்தானமும் திருடர்கள்.  ராஜா தமன்னா மீது காதல் கொள்கிறார். பெரிய பொருளா திருடி விட்டு இனி திருட கூடாது என்று முடிவுக்கு வந்து கடைசியாக ஒரு பெட்டியை திருடுகிறார் ராஜா. அதில் ஒரு குழந்தை இருக்கிறது, அந்த குழந்தை ராஜாவை  அப்பா என்று சொல்கிறது...அது யார் குழந்தை என்று கண்டு பிடிக்கிறார், அப்புறம் ரத்னவேல் பாண்டியன் என்ன ஆனார், அவர் மீண்டும் சென்று வில்லனை அழித்தாரா என்பதே மீதி கதை...


படத்தின் Plus 

ராஜா மற்றும் சந்தானம் முதல் பாதியில் செய்யும் காமெடி 

ரத்னவேல் பாண்டியன் ஆக போலீஸ் வேடத்தில் வரும் கார்த்திக்கின் நடிப்பு(இந்த நடிப்பை பார்பதற்கு ஆகவே இன்னும் ஒரு பார்க்கலாம், அந்த அளவுக்கு அசத்தி இருக்கிறார்). 

படத்தின் Negative Side

CLIMAX காமெடி ஆக செல்வது. 

ரசித்த சில வசனங்கள் .....

 ஃபிரண்டு விஷயத்துல கணக்கு பார்க்க மாட்டேன்.. கணக்கு விஷயத்துல ஃபிரண்டு பார்க்க மாட்டேன்..

சந்தானம் - அவன் என்ன சொன்னாலும் இவ நம்பீடறாளே.. சச்சின் டெண்டுல்கர் நான் தான்ன்னு சொன்னாக்கூட நம்பிடுவா போல இருக்கே....  சக்க ஃபிகருன்னு பார்த்தா இப்படி மக்கு ஃபிகரா இருக்கே..


 கார்த்தி -ஹி ஹி நான் லவ் பண்றேன்..
சந்தானம் - நீ என்ன கிரகத்தை வேணாலும்  பண்ணீக்கோ..ஆனா இப்படி வெக்கப்படாதே.


அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலங்க.. நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப நல்லவனா வளர்ந்துட்டேன்...

ஆம்பளைங்க நாங்க எதுவுமே தெரியலைனாலும் எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவோம்..ஆனா பொம்பளைங்க நீங்க எல்லாமே தெரிஞ்சிருந்தாலும் ஒண்ணுமே தெந்ரியாத மாதிரி நடந்துக்குவீங்க.. 


மக்கள் மனசுல 100 வருஷம் நிலைச்சு வழனும்னா 100 வருஷம் உயிர் வாழனும்னு அவசியம் இல்ல..ஒரு நாள் ஒரே ஒரு நாள் நல்ல படியா வாழ்ந்தா போதும்.

மொத்தத்தில் இந்த சிறுத்தை நன்றாக சீறி இருக்கும்  கிளைமாக்ஸ் இல் காமெடி நீக்கப்பட்டிருந்தால் ....


நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

Jan 20, 2011

Facebook + Google Chrome வசதி

இந்த பதிவு ஒன்றும் புதிது இல்லை. பலர் அறிந்த விடயங்களை நான் சுட்டு தருகிறேன். இதை பற்றி இது வரை அறியாதவர்களுக்கு கண்டிப்பாக பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் ....

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் Calculator   • கூகுள் குரோமின் அட்ரஸ் பார் கூகுள் SEARCH ENGINE ஆக உபயோகிக்கலாம் என்று அனைவருக்கும் தெரியும்.
  • ஆனால் அதை சிறிய கணக்குகள் போதும் கால்குலேட்டராகவும் உபயோகிக்கலாம். 
  • உதாரனத்திற்க்கு 1254*5 என்று நீங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்தால் அடுத்த வினாடியே அதற்க்கான விடை உங்களுக்கு வரும்.

பேஸ்புக்கின் ' தற்காலிக ' கடவுச் சொல் வசதி
சர்ச்சைகளின் உறைவிடமாகிவிட்டது பேஸ்புக். எனினும் புதுப்புது வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் பேஸ்புக் தவறவில்லை. 

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password). 

பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம்.

இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும்.

உங்கள் கைத்தொலைபேசிகளில் 'otp' என டைப் செய்து 32665 என்ற இலக்கத்திற்கு அனுபினால் உங்களுக்கான கடவுச்சொல் கிடைக்கப்பெறும். 

இதனை ஒரு தடவை மற்றும் 20 நிமிடங்கள் வரையே பயன்படுத்தமுடியும். இதனால் பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்படுகின்றது. 

நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

Jan 17, 2011

ஆடுகளம் என் பார்வையில்.....GOATFIELD என்ற தலைப்பில் சேவல் சண்டையை மையமாக வைத்து படைக்கப்பட்ட ஒரு அருமை ஆனா படைப்பு இந்த ஆடுகளம். இரண்டு சேவல்கள் எவ்வாறு பாய்ந்து அடித்து கொள்ளுமோ அது போல மனிதர்களுக்கு இடையில் நடக்கும் போராடத்தை மிகவும் அருமையாக எடுத்து காட்டி உள்ளார் இயக்குநர் வெற்றி மாறன். பொல்லாதவனுக்கு பிறகு இவருக்கு அடுத்த ஹிட் நிச்சயம். 

தனுஷ் மதுரை தமிழ் பேசி அசத்தி உள்ளார். இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. என்னுடன் படம் பார்த்த நண்பர்கள் பலர் பராடினர். 


என்னை கவர்ந்த சில காட்சிகள்.....

ஹீரோயினை தன்னை லவ் பண்ணுவதாக 2 பேர் சொல்ல ,ஏம்மா.. நீ யாரை லவ் பண்றே? என கேட்க ஹீரோயின் ஹீரோவைக் கை காண்பிக்கையில் தனுஷின் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் அருமை....

அதன் பின்னர் வரும் டப்பாங்குத்துப்பாட்டின் காட்சி அமைப்பு ரசிக்க வைக்கிறது 

இறுதி கட்டத்தில் பேட்டைக்காரன் உடன் தனுஷ் தோன்றும் காட்சி மிக அருமை, குருவை நம்பி ஏமார்ந்த சீடனாக தனுஷ் பேசும் வசனங்கள் டாப்..... அதன் பின் குரு தன் தப்பை உணர்ந்து உயிரை மாய்த்து கொள்ளும் கட்சிகளில் வெற்றி மாறன் கலக்குகின்றார்....
ரசித்த சில வசனங்கள் ....

தப்சி - என்ன ..தயங்கறே..கேளு..
தனுஷ் - வந்து.. வந்து.. ஒரு கிஸ் அடிச்சுக்கிட்டா ??

அப்பன்கறது யாரு? ஆத்தா கூட படுத்து பிள்ளை பெத்துக்கறது மட்டும் இல்ல..பிள்ளையோட கையைபிடிச்சுக்கூட்டிட்டுப்போய் இதுதான் உலகம்னு காண்பிக்கனும்...

இத்தனை  நாளா நீ இங்கிலீஷ்ல பேசுனது புரியல.. இப்போ நீ தமிழ்ல பேசுறதும் புரியலயே..அது ஏன் ?

சும்மா ஜாலிக்காகத்தான் அவ கூட சுத்துனேன்.நேத்துதான் அவங்கப்பனைப்பார்த்தேன்,இனி நாமதான் அவளை கவனமா ,நல்லப்டியா பாத்துக்கோணும்னு அப்பவே முடிவு பண்ணீட்டேன்மொத்ததில் இந்த ஆடுகளம் நிலையான ஆடம் போடுகின்றது ... திரை கதை நுணுக்கத்தை சிறப்பாக கையாண்ட வெற்றி மாறன்க்கு வாழ்த்துகள் ..


என்னை மிகவும் கவர்ந்த பாடல், ENJOY நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!