Jan 29, 2011

ராணா


சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட அறிவுப்பு அதிகாரப்பூர்வமாகவே வந்து விட்டது. நேற்றைய கோடம்பாக்கத்தின் பரபரப்பு ரஜினி நடிக்கும் ராணா படத்தை பற்றிதான். முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தில் கைகோர்க்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் மற்றொரு செய்தி, இந்த ராணா, அனிமேஷன் படம் அல்ல… 100 சதவீத பொழுதுபோக்குகள் நிறைந்த பக்கா ரஜினி படம்!இந்த படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். பலவருடங்களுக்கு முன்பாக வந்த மூன்று முகம் படத்தில் ரஜினி மூன்று வேடத்தில் நடித்தார். அதில் ரஜினியின் “அலெக்ஸ் பாண்டியன்” கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளியாகிறது. ரத்னவேல் ஒளிப்பதிவை கவனிக்கஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு ஆன்டனிகலை இயக்கத்தை ராஜீவன் என முன்னணி கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். மாசி 7 ஆம் திகதி ரஹ்மான் Composing ஆரம்பிப்பதாக கூறி உள்ளார்.

ரஜினிக்கு இதில் இரண்டு ஜோடிகள். தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடிப்பார்கள் என பேச்சு அடிபடுகிறது. 
 
தீபிகா படுகோனே இதுபற்றி கூறும்போது, 
 
ரஜினியுடன் நடிக்க என்னை அணுகினர். அவருக்கு ஜோடியாவது பெருமையான விஷயம். கால்ஷீட் பிரச்சினை இருக்கிறது என்றார். ரஜினியுடன் நடிக்க இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு வாய்ப்பு அமையாது என்று கருதுகிறார். வேறு படங்களுக்கு கொடுத்த தேதிகளை `ராணா` படத்துக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளார்."நடித்தால் இனி ரஜினியுடன் தான், வேறு தமிழ் ஹீரோக்களுக்கு இப்போதைக்கு கால்ஷீட் தரும் ஐடியா இல்லை" என ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்தவர் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து ஈராஸ் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், “இந்திய சினிமாவின் நிகரில்லாத சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முற்றிலும் வித்தியாசமானமுழு நீள ரஜினி படமாக ராணா உருவாகிறது. இந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்…”, என்றார்.

ராணாவின் தொழில்நுட்பப் பணிகளை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஐக்யூப் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் கவனிக்கின்றனர். இந்த நிறுவனம் ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்காக எம்மி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது, 2012 இன் முதற்பகுதியில் ராணா திரைக்கு வரும் என எதிர்பக்க படிக்கிறது.

எப்படியோ, தலைவர் தனது அடுத்த படத்தை உடனே துவக்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சிங்கம் கலந்துக்குதுன்னு தெரிஞ்சப்பறம் நொண்டிக்குதிரைகள் ரேஸ் லிருந்து ஒதுங்க வேண்டியதுதான் ....


நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

9 comments:

 1. thalaivar padam release aaguthu endal nondi kthirai enna nalla kuthirayee othunga veandiyathu than !!!! :D :D

  ReplyDelete
 2. @ Emilyn as eme

  //thalaivar padam release aaguthu endal nondi kthirai enna nalla kuthirayee othunga veandiyathu than !!!! :D :D//

  haha, athu sari than boss

  ReplyDelete
 3. சிங்கம் கலந்துக்குதுன்னு தெரிஞ்சப்பறம் நொண்டிக்குதிரைகள் ரேஸ் லிருந்து ஒதுங்க வேண்டியதுதான் ....

  Super...........

  ReplyDelete
 4. @ Karan and Bala - நன்றி உங்கள் வருகைக்கு :)))

  ReplyDelete
 5. @ தர்ஷன்

  //சூப்பர் //

  ThankX :)

  ReplyDelete
 6. இவரு எப்பதாம்பா ஹீரோவா நடிகர்த நிருத்துவாறு ., போறபோக்க பாத்தா அனுஷ்கா இவருக்க்கு பாட்டியா நடிக்கவும் வாய்பிருக்கு.

  ReplyDelete
 7. @ ராஜகோபால்

  //இவரு எப்பதாம்பா ஹீரோவா நடிகர்த நிருத்துவாறு ., போறபோக்க பாத்தா அனுஷ்கா இவருக்க்கு பாட்டியா நடிக்கவும் வாய்பிருக்கு//

  யாரு எப்பிடி நடிச்சாலும் பாபம் பாஸ் , cz hero ரஜினி ஆச்சே ...

  ReplyDelete