Jan 21, 2011

சிறுத்தை என் பார்வையில்.....

ரவிதேஜா, அனுஷ்கா, நடித்த தெலுங்கில் வெளி வந்த விக்ரமார்குடு படத்தின் தமிழ் ரீமேக்தான் சிறுத்தை. அண்ணன் சூர்யா இன் சிங்கத்துக்கு பின்னர் வந்த வழக்கமான மசாலா படம் தான் இந்த சிறுத்தை.  சூர்யாவுக்கு வீட்டிலேயே ஒரு எதிரி(சினிமாவில்) உருவாகி விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. 

இனி கதைக்கு வருவோம், ஆந்திராவில் உள்ள கிராமம் ஒன்றை ஒரு ரவுடிக் குடும்பம் கொடுமைப்படுத்தி கொண்டிருக்கிறது. எங்களை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்குகிறார்கள். உயர்த்திய மீசையையோடு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை அடக்கி மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார். ஆனால் வில்லனுடைய தாக்குதலில் படுகாயம் அடைகிறார் டிஎஸ்பி கார்த்திக்...கார்த்திக் இறந்து விட்டதாக நினைத்து கொண்டு வில்லன் கும்பல் சென்று விட..அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வருகிறார்கள்..... 


இன்னொரு கார்த்திக்(ராஜா)  திருடன். அவரும் சந்தானமும் திருடர்கள்.  ராஜா தமன்னா மீது காதல் கொள்கிறார். பெரிய பொருளா திருடி விட்டு இனி திருட கூடாது என்று முடிவுக்கு வந்து கடைசியாக ஒரு பெட்டியை திருடுகிறார் ராஜா. அதில் ஒரு குழந்தை இருக்கிறது, அந்த குழந்தை ராஜாவை  அப்பா என்று சொல்கிறது...அது யார் குழந்தை என்று கண்டு பிடிக்கிறார், அப்புறம் ரத்னவேல் பாண்டியன் என்ன ஆனார், அவர் மீண்டும் சென்று வில்லனை அழித்தாரா என்பதே மீதி கதை...


படத்தின் Plus 

ராஜா மற்றும் சந்தானம் முதல் பாதியில் செய்யும் காமெடி 

ரத்னவேல் பாண்டியன் ஆக போலீஸ் வேடத்தில் வரும் கார்த்திக்கின் நடிப்பு(இந்த நடிப்பை பார்பதற்கு ஆகவே இன்னும் ஒரு பார்க்கலாம், அந்த அளவுக்கு அசத்தி இருக்கிறார்). 

படத்தின் Negative Side

CLIMAX காமெடி ஆக செல்வது. 

ரசித்த சில வசனங்கள் .....

 ஃபிரண்டு விஷயத்துல கணக்கு பார்க்க மாட்டேன்.. கணக்கு விஷயத்துல ஃபிரண்டு பார்க்க மாட்டேன்..

சந்தானம் - அவன் என்ன சொன்னாலும் இவ நம்பீடறாளே.. சச்சின் டெண்டுல்கர் நான் தான்ன்னு சொன்னாக்கூட நம்பிடுவா போல இருக்கே....  சக்க ஃபிகருன்னு பார்த்தா இப்படி மக்கு ஃபிகரா இருக்கே..


 கார்த்தி -ஹி ஹி நான் லவ் பண்றேன்..
சந்தானம் - நீ என்ன கிரகத்தை வேணாலும்  பண்ணீக்கோ..ஆனா இப்படி வெக்கப்படாதே.


அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலங்க.. நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப நல்லவனா வளர்ந்துட்டேன்...

ஆம்பளைங்க நாங்க எதுவுமே தெரியலைனாலும் எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவோம்..ஆனா பொம்பளைங்க நீங்க எல்லாமே தெரிஞ்சிருந்தாலும் ஒண்ணுமே தெந்ரியாத மாதிரி நடந்துக்குவீங்க.. 


மக்கள் மனசுல 100 வருஷம் நிலைச்சு வழனும்னா 100 வருஷம் உயிர் வாழனும்னு அவசியம் இல்ல..ஒரு நாள் ஒரே ஒரு நாள் நல்ல படியா வாழ்ந்தா போதும்.

மொத்தத்தில் இந்த சிறுத்தை நன்றாக சீறி இருக்கும்  கிளைமாக்ஸ் இல் காமெடி நீக்கப்பட்டிருந்தால் ....


நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!!

6 comments:

 1. Sirapaka ullathu......

  ReplyDelete
 2. climax ahh irunthalum sari starting ahh irunthalum sari siruthai endal seera than seyyum :P :P !!!

  ReplyDelete
 3. நன்றி, உங்களை சிரிக்க வாய்த்த புண்ணியம் எனக்கே :)

  ReplyDelete
 4. @ Emilyn - அது உங்க ஊரு சிறுத்தை இது சினிமா சிறுத்தை !!! :p

  ReplyDelete