Jan 17, 2011

ஆடுகளம் என் பார்வையில்.....



GOATFIELD என்ற தலைப்பில் சேவல் சண்டையை மையமாக வைத்து படைக்கப்பட்ட ஒரு அருமை ஆனா படைப்பு இந்த ஆடுகளம். இரண்டு சேவல்கள் எவ்வாறு பாய்ந்து அடித்து கொள்ளுமோ அது போல மனிதர்களுக்கு இடையில் நடக்கும் போராடத்தை மிகவும் அருமையாக எடுத்து காட்டி உள்ளார் இயக்குநர் வெற்றி மாறன். பொல்லாதவனுக்கு பிறகு இவருக்கு அடுத்த ஹிட் நிச்சயம். 

தனுஷ் மதுரை தமிழ் பேசி அசத்தி உள்ளார். இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. என்னுடன் படம் பார்த்த நண்பர்கள் பலர் பராடினர். 


என்னை கவர்ந்த சில காட்சிகள்.....

ஹீரோயினை தன்னை லவ் பண்ணுவதாக 2 பேர் சொல்ல ,ஏம்மா.. நீ யாரை லவ் பண்றே? என கேட்க ஹீரோயின் ஹீரோவைக் கை காண்பிக்கையில் தனுஷின் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் அருமை....

அதன் பின்னர் வரும் டப்பாங்குத்துப்பாட்டின் காட்சி அமைப்பு ரசிக்க வைக்கிறது 

இறுதி கட்டத்தில் பேட்டைக்காரன் உடன் தனுஷ் தோன்றும் காட்சி மிக அருமை, குருவை நம்பி ஏமார்ந்த சீடனாக தனுஷ் பேசும் வசனங்கள் டாப்..... அதன் பின் குரு தன் தப்பை உணர்ந்து உயிரை மாய்த்து கொள்ளும் கட்சிகளில் வெற்றி மாறன் கலக்குகின்றார்....




ரசித்த சில வசனங்கள் ....

தப்சி - என்ன ..தயங்கறே..கேளு..
தனுஷ் - வந்து.. வந்து.. ஒரு கிஸ் அடிச்சுக்கிட்டா ??

அப்பன்கறது யாரு? ஆத்தா கூட படுத்து பிள்ளை பெத்துக்கறது மட்டும் இல்ல..பிள்ளையோட கையைபிடிச்சுக்கூட்டிட்டுப்போய் இதுதான் உலகம்னு காண்பிக்கனும்...

இத்தனை  நாளா நீ இங்கிலீஷ்ல பேசுனது புரியல.. இப்போ நீ தமிழ்ல பேசுறதும் புரியலயே..அது ஏன் ?

சும்மா ஜாலிக்காகத்தான் அவ கூட சுத்துனேன்.நேத்துதான் அவங்கப்பனைப்பார்த்தேன்,இனி நாமதான் அவளை கவனமா ,நல்லப்டியா பாத்துக்கோணும்னு அப்பவே முடிவு பண்ணீட்டேன்



மொத்ததில் இந்த ஆடுகளம் நிலையான ஆடம் போடுகின்றது ... திரை கதை நுணுக்கத்தை சிறப்பாக கையாண்ட வெற்றி மாறன்க்கு வாழ்த்துகள் ..


என்னை மிகவும் கவர்ந்த பாடல், ENJOY 



நன்றி, மீண்டும் சந்திப்போம் !!!! 

5 comments:

  1. ஆடுகளம் என்ற சொல்லுக்கு goatfield என்ற சொல் சரியான மொழிபெயர்ப்பு தானா...?

    வசன தொகுப்பு நன்றாக இருந்தது...

    ReplyDelete
  2. நன்றி நண்பரே உங்கள் வருகைக்கு ...
    ஆடு என்றால் Goat களம் என்றால் Field..
    ஆகவே இது ரெண்டையும் இணைத்து GOATFIELD என்று போடேன்....(இது சரியான மொழிபெயர்ப்பு இல்லை) :)

    ReplyDelete
  3. Super boss..
    தங்களது சிறந்த விமர்சனத்துக்கு நன்றி.
    நான் ரசித்த வசனம்.
    நாங்கல்லாம் சுனமிலேயே swimming போறவங்க....

    ReplyDelete
  4. நன்றி பாஸ் உங்கள் வருகைக்கு :)))

    அந்த வசனத்தை நானும் ரசித்தேன், ஆனால் அந்த வசனத்துக்கு தற்போது ஏற்பட பிரச்சனையை அறிவிரோ ???

    ReplyDelete